
காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூர் பகுதியில் மறு நடவு செய்யப்பட்டு, துளிர்த்துவந்த அரச மரத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தது குறித்து பசுமை ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பல்லவன் நகர் பகுதியில் நூற்றாண்டுகளைக் கடந்த 40 டன் எடை கொண்ட அரசமரத்தை அகற்ற வீட்டின் உரிமையாளர் முடிவு செய்து, பசுமை ஆர்வலர் மேகநாதன் மற்றும் விழுதுகள் அமைப்பினரிடம் இதுகுறித்து தெரிவித்தனர்.
இது குறித்து பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஜேசிபி, 4 ராட்சத கிரேன் மற்றும் ட்ரெய்லர் லாரி உதவியுடன் ஆலமரம் வேருடன் எடுக்கப்பட்டு சுமார் 2 லட்சம் மதிப்பில் செலவு செய்து காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் பகுதிக்கு எடுத்து சொல்லப்பட்டு சாலை ஓரம் கடந்த 13.05.2024ல் மறு நடவு செய்யப்பட்டது.
மேலும் அது மீண்டும் வளர்ச்சி பெற தேவையான பணிகளையும் தொடர்ச்சியாக கடந்த ஓராண்டாக பசுமை ஆர்வலர்கள் செய்து வந்தனர். மரம் காய்ந்துவிடக் கூடாது என்று ஈரமான கோணிகளை அதன் மீது போட்டுவைத்து, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வந்த நிலையில், மரம் துளிர் விட ஆரம்பித்ததால் பசுமை ஆர்வலர்களும் அவ்வழியே செல்பவர்களும் மகிழ்ச்சியுற்றனர்.
இந்நிலையில் நேற்று திடீரென அந்த ஆலமரத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் தீ கொழுந்து விட்டு எரிந்து முற்றிலும் மரம் சேதமடைந்தது.
இது குறித்து உடனடியாக தகவல் அறிந்த காஞ்சிபுரம் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட நிலையிலும், மரம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்த செயல் பசுமை ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதற்கு தீ வைக்கும் அளவிற்கு கொடிய மனம் கொண்ட நபர்களின் மனநிலை வேதனை அளிப்பதாகவும், பசுமை ஆர்வலர் மேகநாதன் தெரிவித்தார்.
இப்பணிக்காக நூற்றுக்கணக்கானவர்கள், தங்களது ஓய்வு நேரத்திலும் பணி செய்த நிலையில் மரம் துளிர்விட்ட நிலையில், தீ வைத்திருப்பது, மனதிற்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க.. மல்லை சத்யாவின் நடவடிக்கைகள் சரியில்லை: வைகோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.