
சேலத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை மீது கறுப்பு பெயின்ட் வீசப்பட்டதால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் அண்ணா பூங்கா முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவச்சிலையின் மார்பு மற்றும் கால் பகுதியில் கருப்பு பெயின்ட் ஊற்றி அவமதிப்பு செய்த விவகாரம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னணி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடியும் தமிழகத்தில் வரவிருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், திமுக மூத்த தலைவரும், முதல்வரின் ஸ்டாலினின் தந்தையுமான மறைந்த முதல்வர் கருணாநிதி சிலை மீது பெயின்ட் ஊற்றி அவமதித்தது யார்? காரணம் என்ன? என்பது குறித்து கண்காணிப்புக் கேமரா காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.