மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்

மதுரை வழித்தட ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவது பற்றி...
மதுரை சந்திப்பு
மதுரை சந்திப்புகோப்புப்படம்
Published on
Updated on
2 min read

மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்கள் ஜூலை 30 வரை மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை மண்டலத்தில் பொறியியல் வேலைகள் நடைபெறவுள்ளதால், ஜூலை 16 முதல் 30 வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்கள் விவரம்

1. ரயில் எண் - 16847 - மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில்

ஜூலை 16, 20, 23, 27, 30 ஆகிய தேதிகளில் திருச்சி, காரைக்குடி, விருதுநகர் வழியாக இயக்கப்படும். மணப்பாறை, வையம்பட்டி, வடமதுரை, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் கல்லிக்குடி ஆகிய ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லாது. பயணிகளின் நலன் கருதி புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை சாலை, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

2. ரயில் எண் - 16788 - ஸ்ரீ வைஷ்ணவ தேவி கத்ரா - திருநெல்வேலி விரைவு ரயில்

ஜூலை 17, 24 ஆகிய தேதிகளில் திருச்சி, காரைக்குடி, மானாமதுரை மற்றும் விருதுநகர் வழித்தடத்தில் இயக்கப்படும். திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, மதுரை ஆகிய ரயில் நிலையங்கள் வழியாகச் செல்லாது. பயணிகளின் நலன் கருதி புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

3. ரயில் எண் - 16128 - குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில்

ஜூலை 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் மற்றும் மணப்பாறை வழியாக இயக்கப்படாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

4. ரயில் எண் - 16848 - செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில்

ஜூலை 16, 18, 19, 20, 21, 22, 24, 25, 26, 27, 30 ஆகிய தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். கல்லிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி மற்றும் மணப்பாறை வழியில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

5. ரயில் எண் - 12666 - கன்னியாகுமரி - ஹெளரா அதிவிரைவு ரயில்

ஜூலை 19, 26 தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வழியில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

6. ரயில் எண் - 07229 - கன்னியாகுமரி - ஹைதராபாத் சிறப்பு ரயில்

ஜூலை 18, 25 தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வழியில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

7. ரயில் எண் - 16352 - நாகர்கோவில் - மும்பை சிஎஸ்டி விரைவு ரயில்

ஜூலை 24, 27 தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, திண்டுக்கல் வழியில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

8. ரயில் எண் - 16321 - நாகர்கோவில் - கோவை விரைவு ரயில்

ஜூலை 26, 27 தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் ரோடு திண்டுக்கல் வழியில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி நிலையங்களில் நிற்கும்.

9. ரயில் எண் - 16354 - நாகர்கோவில் - காச்சிகுடா விரைவு ரயில்

ஜூலை 26 ஆம் தேதி விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும். மதுரை, திண்டுக்கல் வழியில் செல்லாது. அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.

Summary

Southern Railway has announced that trains operating on the Madurai route will operate on an alternate route until July 30.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com