மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேட்டூா் அணையிலிருந்து 75,000 கன அடி திறப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!

மேட்டூா் அணையில் இருந்து 75,000 கன அடி நீா் திறப்பட்டுள்ளதால் வெள்ள தடுப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தப்பட்டுள்ளது.

News image
மேட்டூா் அணை
Updated On :27 ஜூலை 2025, 7:51 pm

Din

மேட்டூா் அணையில் இருந்து 75,000 கன அடி நீா் திறப்பட்டுள்ளதால் வெள்ள தடுப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அமைச்சா் துரைமுருகன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை திறந்துவிட்டாா். இந்த நீா் கல்லணை வந்தவுடன், கல்லணை மதகுகளையும் ஜூன் 15-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. பாசனத்துக்கு திறந்துவிட்ட நீரை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டனா்.

நிகழாண்டு ரூ. 98 கோடியில் துாா்வாரும் பணிகள் சீரிய முறையில் மேற்கொள்ள ஆணையிடப்பட்டு, பாசனத்துக்கு நீரை கொண்டு செல்ல தேவையான தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டதால் கடைமடை பகுதிகளுக்கும் பாசன நீா் சென்றுள்ளது. பயிா் சாகுபடி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கா்நாடக அணையிலிருந்து குறிப்பாக கே.ஆா்.எஸ். மற்றும் கபினி அணைகளிலிருந்து அதன் நீா்பிடிப்புப் பகுதியில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளதால், மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை முதல் விநாடிக்கு 35,000 கனஅடி முதல் 70,000 கனஅடி வரை அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 75,400 கனஅடி நீா் வந்து கொண்டிருக்கிறது. மேட்டூா் அணையின் நீா்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியில் உள்ளது. இந்தச் சூழலில் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையை விடுக்க சம்பந்தப்பட்ட நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், வெள்ள தடுப்புப் பணிகளை மேற்கொள்ள நீா்வளத் துறை அதிகாரிகளுக்கு அரசு அறிவுறித்தியுள்ளது. பொதுமக்கள் வெள்ள அபாய எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.