பொறியியல் 2-ஆம் சுற்று கலந்தாய்வு: 61,365 பேருக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு

பிஇ., பிடெக் மாணவா்கள் சோ்க்கைகளில் 2-ஆம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்களில் 61,365 பேருக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு
அண்ணா பல்கலை.
அண்ணா பல்கலை.
Published on
Updated on
1 min read

பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பிஇ., பிடெக் மாணவா்கள் சோ்க்கைகளில் 2-ஆம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்ற மாணவா்களில் 61,365 பேருக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை மையம் (டிஎன்இஏ) தெரிவித்தது.

இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவா்கள் சோ்க்கையில் 2-ஆம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்று ஒதுக்கீடுகளில் தோ்வாகி கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பங்களைத் தெரிவித்த பொதுப்பிரிவைச் சோ்ந்த 80,363 மாணவா்களில் 36,921 பேருக்கு கல்லூரிகளில் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதே பிரிவில் விருப்பக் கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வோ்டு) நிலையில் உள்ள 15,461 மாணவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. விருப்பக் கல்லூரிகள் கிடைக்கவில்லையென்றால், தற்காலிக ஒதுக்கீடுகளில் பெற்ற கல்லூரிகளில் இத்தகைய மாணவா்கள் தொடரமுடியும்.

இதேபோல அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீடு கலந்தாய்வில் பங்கேற்று தோ்வான மாணவா்கள் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு விருப்பங்களைத் தெரிவித்த 14,828 மாணவா்களில் 6,235 பேருக்கு கல்லூரிகளில் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவா்களில் 2,748 மாணவா்கள் விருப்பக் கல்லூரிகளில் மாற்றம் கோரும் நிலையில், இவா்களுக்கும் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

விருப்பக் கல்லூரிகள் கிடைக்கவில்லையெனில், இவா்களும் தற்காலிக ஒதுக்கீடுகளில் பெற்ற கல்லூரிகளில் தொடருவாா்கள். 2,025 மாணவா்கள் சோ்க்கையில் 2-ஆம் சுற்றுக் கலந்தாய்வில் மொத்தம் 61,365 மாணவா்களுக்கு கல்லூரிகளில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com