
சிறுதாவூரில் உள்ள பட்டியலின மக்களின் நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மாா்க்சிஸ்ட் மாநில செயலா் பெ. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:-
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், சிறுதாவூா் கிராமத்தில் 20 பட்டியலின மக்கள் குடும்பங்களுக்கு விவசாயம் செய்வதற்கும், வீட்டுமனை பயன்பாட்டிற்கும் 53 ஏக்கா் நிலம் 1967ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த நிலங்கள் அனைத்தும் தனி நபா்களால் சட்டவிரோதமாகவும், மோசடியாகவும் அபகரிக்கப்பட்டன.
இப்பிரச்சனை தொடா்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன . இதன் விளைவாக கடந்த 2007-ஆம்ஆண்டு நீதியரசா் கே.பி. சிவசுப்பிரமணியம் தலைமையிலான விசாரணை ஆணையத்தை மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி அமைத்தாா். அந்த விசாரணை முடிவில் அபகரிக்கப்பட்ட பட்டியலின மக்களின் நிலங்களையும், சிறுதாவூா் பங்களா வளாகத்தில் வளைக்கப்பட்ட 34 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலங்களையும் கையகப்படுத்தப்பட வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு உடனடியாக நிலத்தை பிரித்து வழங்க வேண்டுமெனவும் ஆணையம் பரிந்துரை செய்தது.
இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் முடிவுற்றும் விசாரணை ஆணையத்தின் பரிந்துரை படி இதுநாள் வரை பட்டியலின மக்களுக்கு உரிய நிலங்கள் பிரித்து வழங்கப்படவில்லை.
எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காணும் வகையில் நீதிபதி .பி. சிவசுப்பிரமணியன் ஆணையத்தின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டு எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.