பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் வழித்தட திட்டத்தை இருகட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரை செய்வதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை, தமிழ்நாடு அரசிடம் கடந்தாண்டு சமர்பிக்கப்பட்டது.
இந்த வழித்தடம் தோராயமாக 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்நிலை மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் மற்றும் வழித்தடத்தின் எதிர்கால வளர்ச்சி போன்ற சமீபத்திய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
முதல்கட்டமாக பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமையவுள்ளது. ரூ. 8,779 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமயிலை - போட்கிளப் இடையே மெட்ரோ ரயிலுக்கான சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் மீண்டும் நிராகரிப்பு! காரணம் என்ன?

பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு மாற்று இடம்: தமிழக அரசின் புதிய முன்மொழிவு வரவில்லை; மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

தமிழக விவசாயிகளிடம் கொப்பரை தேங்காய், தோதாபுரி மாம்பழங்கள் கொள்முதல்: மத்திய அரசு ஒப்புதல்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



