லாரி பட்டறையில் தீ: தடுப்புப் பணியை மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

லாரி பட்டறையில் தீ விபத்து நேரிட்டபோது, தடுப்புப் பணியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈடுபட்டார்.
namakal fire accident
விபத்து நேரிட்ட இடம்DPS
Published on
Updated on
1 min read

நாமக்கல்: நாமக்கல் அருகே லாரி பட்டறையில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தடுப்புப் பணிகளில் நேரடியாகக் களமிறங்கினார்.

நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்தில் முத்து என்பவர் பழைய இரும்புக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் பழைய லாரி கார்களில் உள்ள இரும்புகளை சேகரித்து அதனைத் தனித்தனியாகப் பிரித்து விற்பனை செய்து வருகிறார்.

தீ விபத்து
தீ விபத்து

இந்த நிலையில் அவரது கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பழைய லாரிகளின் உதிரி பாகங்கள் திடீரென எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிக்காக வந்திருந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அந்த வழியாக சனிக்கிழமை காலை எட்டு மணியளவில் பரமத்தி வேலூருக்கு காரில் பயணம் மேற்கொண்டார்.

நாமக்கல் தீ விபத்து
நாமக்கல் தீ விபத்து

அப்போது அந்தப் பழைய இரும்பு கடையின் முன்பு இருந்த பழைய வாகனத்தின் உதிரி பாகங்கள் எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்த அவர், உடனடியாக வாகனத்தை நிறுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினரிடம் தீ எவ்வாறு பற்றியது என்று கேட்டறிந்தார். மேலும் நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலை என்பதால் வாகன ஓட்டிகள் சிரமப்படக்கூடாது என்பதால் தீயை உடனடியாக அணைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் பழைய வாகனங்களில் எரிந்து கொண்டிருக்கும் தீயை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com