
சென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஒரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், சேலம், தருமபுரி, திருப்பத்தூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, நீலகிரி, தேனியில் 4 மணி வரை மழை பெய்யும் வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... திட்டமிடப்படாத நெரிசல் கொலைகள்!
தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்திலும் 4 மணி வரை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலான அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்டப் பகுதிகளில் இன்று 2 மணியளவில் பலத்த மழை பெய்தது. செம்பரம்பாக்கம், காட்டுப்பாக்கம், ஐயப்பந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. ஆவடி அடுத்த பருத்திப்பட்டில் பலத்த காற்றுடன் மழை பெய்தபோது, வெயிலுக்காக சாலையில் போடப்பட்டிருந்த நிழற்பந்தல் சரிந்து விழுந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.