பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எனினும் பாமகவில் உள்ள பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று சென்னை வந்துள்ள ராமதாஸ் கூறியுள்ளார்.
இதனிடையே அன்புமணி 10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் நடத்துவது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தரப்பு பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது.
முதற்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
1. 15.06.2025 ஞாயிறு காலை 10.00 மணி - திருவள்ளூர் மாவட்டம்
2. 15.06.2025 ஞாயிறு மாலை 03.00 மணி - செங்கல்பட்டு மாவட்டம்
3. 16.06.2025 திங்கள் காலை 10.00 மணி - காஞ்சிபுரம் மாவட்டம்
4. 16.06.2025 திங்கள் மாலை 03.00 மணி -இராணிப்பேட்டை மாவட்டம்
5. 17.06.2025 செவ்வாய் காலை 10.00 மணி - வேலூர் மாவட்டம்
6. 17.06.2025 செவ்வாய் மாலை 03.00 மணி -திருப்பத்தூர் மாவட்டம்
7. 18.06.2025 புதன் காலை 10.00 மணி - திருவண்ணாமலை மாவட்டம்
8. 18.06.2025 புதன் மாலை 03.00 மணி - கள்ளக்குறிச்சி மாவட்டம்
9. 19.06.2025 வியாழன் காலை 10.00 மணி -சேலம் மாவட்டம்
10. 19.06.2025 வியாழன் மாலை 03.00 மணி -தருமபுரி மாவட்டம்
மேற்கண்ட அனைத்து மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள்.
சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள கட்சியின் மாவட்டத் தலைவர், மாவட்ட செயலாளர், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிர்வாகிகளும், சிறப்பு அழைப்பாளர்களும் இக்கூட்டங்களில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகுவிரைவில் அறிவிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ராகுல் - சித்தராமையா சந்திப்பில் பேசியது என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

ராமதாஸ் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்குத் தடை!

மாம்பழத்தில் விஷம் ஏறிவிட்டது! சௌமியா வென்றால் 'அதருமபுரி' ஆகிவிடும்! ராமதாஸ்

செளமியாவுக்கு வாக்களிக்காதீர்கள்! ராமதாஸ் வேண்டுகோள்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



