இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

முக்கொம்பு வந்தடைந்தது காவிரி நீர்! மலர், நெல் மணிகள் தூவி வரவேற்பு

முக்கொம்பு வந்தடைந்த காவிரி நீருக்கு மலர், நெல் மணிகள் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருச்சி முக்கொம்பு - கோப்புப்படம்

Published On :

மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட நீர், இன்று காலை முக்கொம்பு வந்தடைந்தது. காவிரி நீரை மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் விவசாயிகள் வரவேற்றனர்.

ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரி நீர் திறந்து விடப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று காவிரி நீரை திறந்து வைத்தார்.

மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை கடந்து இன்று திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. முக்கொம்புக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.

முன்னதாக முக்கொம்பு சுற்றுலா தல நுழைவு வாயிலிருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்தனர். முக்கொம்பு மேலணையில் உள்ள காவிரி தாய் சிலைக்கும் கரிகாலன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காவிரிக்கு படையலிட்டு பூஜை செய்தனர். அதனையடுத்து வாழ்த்து முழக்கங்கள் முழங்க மலர்கள் தூவியும் நெல்மணிகள் தூவியும் காவிரி நீரை வரவேற்றனர்.

ஜூன் 12-ஆம் தேதியான சரியான தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுடன் பேசி தொடர்ந்து தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நெல்லுக்கு குவின்டாலுக்கு 2500 ரூபாய் அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சிதான். ஆனால் அது குறைவான தொகையாக உள்ளது.

அதனை கூடுதலாக உயர்த்தி அறிவிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் மட்டும் தூர் வாரும் பணிகள் 70% நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டை விட சிறப்பாக தூர்வாரும் பணிகள் அனைத்தும் நடந்துள்ளது.

கடைமடை வரை தண்ணீர் வந்து சேரும் என்கிற நம்பிக்கை உள்ளது. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம், த.மா.க விவசாய அணி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.