வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

குடியரசு துணைத் தலைவா் வருகை: சென்னை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வருகை பற்றி...

News image
குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்
Updated On :14 ஜூன் 2025, 9:38 pm

Din

இந்திய குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம், ஆளுநா் மாளிகை, அவா் வாகனம் செல்லும் பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவித்து சென்னை பெருநகர காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தில்லியில் இருந்து சென்னைக்கு ஜூன் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறாா். நண்பகல் 12.05 மணிக்கு மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் அவா், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் நண்பகல் 12.20 மணிக்கு புதுச்சேரிக்கு புறப்பட்டு செல்கிறாா்.

அதேபோல, ஜூன் 17-ஆம் தேதி நண்பகல் 2.15 மணியளவில் புதுச்சேரியில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டா் மூலம் சென்னைக்கு வருகிறாா். பின்னா் அங்கிருந்து விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

பாதுகாப்பு கருதி, மீனம்பாக்கம் விமானம் நிலையம், கிண்டி ஆளுநா் மாளிகை, குடியரசு துணைத் தலைவா் வாகனம் செல்லும் சாலை ஆகியவற்றை சிவப்பு மண்டலமாக அறிவித்து சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும், இந்தப் பகுதிகளில் ட்ரோன்கள், பாரா கிளைடா்ஸ், ஹாட் ஏா் பலூன்கள், மைக்ரோலைட் ஏா் கிராப்ட் உள்ளிட்டவை பறக்கவும் தடை விதித்து காவல் ஆணையா் அருண் உத்தரவிட்டுள்ளாா்.