கள் இறக்கும் போராட்டம்: பனைமரம் ஏறிய சீமான்

கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
seeman
பனைமரம் ஏறும் சீமான்.
Published on
Updated on
1 min read

கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆக்கட்சியினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்செந்தூர் அருகே பெரியதாழையில் பனைமரம் ஏறி கள் இறக்கும் போராட்டத்தில் சீமான் ஈடுபட்டார்.

அப்போது கள் இறக்க தேவையான பொருட்களுடன் பனை மரத்தில் சீமான் ஏறினார். சீமான் மரம் ஏறுவதற்கு வசதியாக பனை மரத்தில் ஏணிபோல் கட்டைகளை வைத்து கட்டியிருந்தனர்.

தொடர்ந்து, பனைமரத்தில் இருந்து கள்ளை இறக்கிய சீமான் அதனை பருகினார்.

சொல்லப் போனால்... சொந்த மண்ணிலேயே அன்னியரைப் போல...

கள் இறக்கும் போராட்டத்தில் சீமானுடன் பனையேறும் தொழிலாளர்களும் பங்கேற்றனர். தமிழகத்தில் கள் இறக்க 33 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட தடை தொடா்கிறது.

கடந்த 17 ஆண்டுகளாக பல தரப்பு போராட்டத்தை கள் இயக்கம் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com