Tourist spots in the Nilgiris closed
உதகை தொட்டபெட்டா சிகரம் (கோப்புப் படம்) DIN

தொடர் கனமழை: நீலகிரியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!

தொடர் கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் தற்காலிமாக மூடப்படுவது பற்றி...
Published on

நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழையால் சுற்றுலாத் தலங்கள் தற்காலிமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று மிக கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

அதன்படி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா காட்சிமுனை, அவலாஞ்சி, எட்டாவது மைல், படப்பிடிப்பு தளம், பைன் காடுகள், கேரன்ஹில் மற்றும் 9-வது தளம் உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களிலும் இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com