வேளச்சேரியில் அதி நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறப்பு!

அதி நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை திறந்துவைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
வேளச்சேரியில் அதி நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறப்பு!
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூன் 18) சென்னை வேளச்சேரி அக்வாடிக் ஜிம்னாஸ்டிக் பாட்மிட்டன் (ஏஜிபி) விளையாட்டு வளாகத்தில் ரூ. 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விளையாட்டு வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்து, விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவதை பார்வையிட்டார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடங்கள் குளிரூட்டப்பட்டு, புதிய உபகரணங்கள் வாங்கி பொருத்திடவும், நவீன முறையில் சீரமைக்கவும் 9 கோடியே 78 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அக்வாடிக் ஜிம்னாஸ்டிக் பாட்மிட்டன் (ஏஜிபி) விளையாட்டு வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடம் ரூ. 48 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வகையான அதிநவீன உடற்பயிற்சி உபகரணங்கள் பொருத்தப்பட்டு குளிர்சாதன வசதியுடன் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி ஏ.ஜி.பி.நீச்சல் குள வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதியில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு துணை முதலமைச்சர், விடுதியில் தங்கியுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சமைக்கப்பட்ட மதிய உணவினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விளையாட்டு வீராங்கனைகளுக்கான விடுதியில் அவர்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டு, மேலும் அவர்கள் பெற்று வரும் பயிற்சி குறித்தும், கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகள் குறித்தும் கலந்துரையாடி, பதக்கங்கள் வெல்ல வாழ்த்து தெரிவித்தார். 

நீச்சல் குள வளாகத்தில் பல்வேறு உயரங்களில் இருந்து வெவ்வேறு முறைகளில் டைவ் அடித்து நீருக்குள் குதிக்கும் விளையாட்டில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெறுவதையும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி பார்வையிட்டார். 

இதையும் படிக்க: ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com