
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மருமகன் பரசுராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் பரசுராமன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, தைலாபுரம் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பை ஒத்திவைத்துவிட்டு, சென்னைக்கு ராமதாஸ் புறப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே ராமதாஸின் ஆதரவாளர்களாக பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி மற்றும் அக்கட்சியின் எம்எல்ஏ அருள் ஆகியோர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை வரும் ராமதாஸ் மூன்று பேரையும் நேரில் சந்தித்து நலம்விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், சேலத்தில் பாமக பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.