வால்பாறையில் பெய்துவரும் கனமழையால் கருமலை இரைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், கருமலை இரைச்சல்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இன்று(ஜூன் 26) மாலை வரை பெய்த கனமழையால் வால்பாறை அருகே உள்ள சேடல் டேம் பகுதியில் குடியிருப்புப் பகுதி அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
மேலும் ,வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 150 அடியாக உயர்ந்த நிலையில், இதே நிலை நீடித்தால் இன்னும் ஒருசில நாள்களில் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 160 அடியை எட்டி நிறைந்துவிடக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு அறிவித்து ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Due to the heavy rains in Valparai, water is gushing from the Iraichalparai waterfall in Karumalai.
இதையும் படிக்க: கால்நடைகள் விற்பனைக்கு புதிய இணையதளம்! - தமிழக அரசு விளக்கம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கனைகதிர் ஆவி!

வால்பாறையில் கனமழை: பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு

வால்பாறையில் கனமழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



