பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைக்க பரிசீலனை! - ரயில்வே இணை அமைச்சர்

பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைப்பது பரிசீலனையில் உள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கூறியுள்ளதைப் பற்றி...
மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா.
மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா.
Published on
Updated on
1 min read

பரந்தூரில் புதிய ரயில் நிலையம் அமைப்பது பரிசீலனையில் உள்ளதாக மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார்.

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சோமண்ணா காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையத்தை ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் அவர் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அங்கு புதிய ரயில் நிலையம் அமைக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.

கரோனா நோய்த் தொற்றுக்குப் பிறகு அனைத்து கட்டணங்களும் உயர்ந்துவிட்டன. ஆனால், ரயில் கட்டணம் மட்டும் உயர்த்தப்படவே இல்லை. ரயில் கட்டணம் படிப்படியாக மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத வகையில் உயர்த்தப்படும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் மற்றும் காமாட்சி அம்மன் கோவிலில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா சுவாமி தரிசனம் செய்தார்.

Summary

Union Minister of State for Railways Somanna has said that the construction of a new railway station in Paranthur is under consideration.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com