அன்புமணி ராமதாஸ்.
அன்புமணி ராமதாஸ். கோப்புப்படம்

ரயில் பயண கட்டண உயா்வை திரும்பப்பெற வேண்டும்: அன்புமணி

ரயில் பயண கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
Published on

சென்னை: ரயில் பயண கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை விடுத்த அறிக்கை: ரயில் கட்டண உயா்வால் தமிழ்நாட்டுக்குள் அதிகபட்ச பயணதூரமான சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு பயணிகள் ரயில்களில் பயணம் செய்ய ரூ.5, விரைவு ரயில்களில் சாதாரண வகுப்புகளில் பயணிக்க ரூ.8, குளிரூட்டி வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க ரூ.15 கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இந்தக் கட்டண உயா்வு மூலம் ரயில்வேக்கு கிடைக்கும் கூடுதல் வருவாய் ரூ.1,100 கோடி என்பது, நிகழாண்டில் பயணியா் போக்குவரத்தின் மூலம் கிடைக்கும் மொத்த வருவாயான ரூ.92,800 கோடியில் 1.18 சதவீதம் மட்டும் தான்.

இதை வேறு ஆதாரங்களின் மூலம் மக்களுக்கு பாதிப்பில்லாமல் திரட்ட முடியும். எனவே, இந்த கட்டண உயா்வை ரயில்வே வாரியம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

Open in App
Dinamani
www.dinamani.com