அதிமுக - பாஜக இடையே இணைப்புதான் இருக்கிறது; பிணைப்பு இல்லை: திருமாவளவன்

மதுரையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி
VCK leader Thirumavalavan on admk - bjp alliance
திருமாவளவன்
Published on
Updated on
1 min read

அதிமுக - பாஜக இடையே இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இல்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் 2026 தேர்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய தொல். திருமாவளவன் இதுபற்றி,

"அமித்ஷா மட்டும்தான் திரும்பத் திரும்ப கூட்டணி ஆட்சி என்ற கருத்தை சொல்லி வருகிறார். இதுவரையில் அதிமுக தலைவர், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்தக் கருத்தையும் சொல்லாமல் மௌனம் காக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தேன். தற்போது அவர் அதற்கு விடை அளித்திருக்கிறார். அவர் சொல்லியிருக்கிற பதில் பாஜகவுக்குதான் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

கூட்டணி ஆட்சி இங்கு இல்லை, அதிமுக அதற்கு உடன்படாது என்கிற விடையை பாஜகவினருக்குத்தான் சொல்லி இருக்கிறார் என்பதை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது.

அதேபோல அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார் இபிஎஸ். கபளீகரம் செய்வதற்கு யார் முயற்சிக்கிறார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும்.

அதிமுகவை, திமுக தலைமையிலான கட்சியில் கபளீகரம் செய்ய முயற்சிக்க வாய்ப்பு இல்லை. அப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளவும் முடியாது. அவர்களுடன் இருக்கும் கட்சிகளால் மட்டும்தான் விழுங்குகிற முயற்சியை மேற்கொள்ள முடியும். ஆகவே அந்த கருத்தும் பாஜகவுக்கு எதிராக அவர் சொல்லியிருக்கிறார் என்றுதான் உணர்ந்துகொள்ள முடிகிறது. பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இல்லை" என்று கூறியுள்ளார்.

Summary

VCK leader Thirumavalavan said that there is a connection between the AIADMK and the BJP, but not a bond.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com