3 நாள்கள் ட்ரோன் பயிற்சி: தமிழக அரசு ஏற்பாடு!

ட்ரோன் பயிற்சி தொடர்பாக...
 ட்ரோன் (கோப்புபடம்)
ட்ரோன் (கோப்புபடம்)
Published on
Updated on
1 min read

தமிழக அரசின் சார்பில் சென்னையில் வருகிற மார்ச் 18 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ட்ரோன் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாள்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் ட்ரோன் பயிற்சி வரும் 18.03..2025 முதல் 20.03.2025 தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் ட்ரோன் விதிமுறைகள் & ட்ரோன் தொழில்நுட்ப அறிமுகம், ட்ரோன் ஒளிப்பதிவு நுட்பங்கள், வான்வழி புகைப்படம் எடுத்தல் பற்றிய கண்ணோட்டம், FPV ஒளிப்பதிவு DGCA இன் கீழ் விமான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு போன்றவை கற்றுத்தரப்படும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விளக்கப்படும்.

இதையும் படிக்க: மார்ச் 6, 7-ல் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 16 மின்சார ரயில்கள் ரத்து!

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாள்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600032. 8668108141 / 8668102600 / 7010143022.

முன்பதிவு அவசியம் என்றும் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com