/

கோடை வெயிலில் ஒரு மகிழ்ச்சியான செய்தி.. மழைக்கு வாய்ப்பு!

மார்ச் முதல் வாரத்திலேயே வெப்பம் தகிக்கத் தொடங்கிவிட்டது.

News image
மழை அறிவிப்பு - கோப்புப்படம்
Updated On :7 மார்ச் 2025, 9:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் கோடை வெப்பம் எப்படி வீசப்போகிறது என்பதற்கு ஒரு உதாரணம் போல, மார்ச் முதல் வாரத்திலேயே வெப்பம் தகிக்கத் தொடங்கிவிட்டது.

அது மட்டுமா, தமிழகத்தில் மதுரை, ஈரோடு மாவட்டங்களில் ஏற்கனவே வெயில் சதமடித்துவிட்டது. இந்த நிலையில்தான் குளுகுளுவென ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அதுதான் மார்ச் 10ஆம் தேதி முதல் மழைக்கான வாய்ப்பு.

10ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்.

11ஆம் தேதி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுபோல, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இராமநாதபுரம் மாவட்டத்தில் 10ஆம் தேதி முதல் மூன்று நாள்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 10 ஆம் தேதி மாவட்டத்தில் பரவலாக மேகமூட்டத்துடன் காணப்படும். கடலோரப் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

11ஆம் தேதி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

குறிப்பாக இராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் 11 ஆம் தேதி ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

12 ஆம் தேதி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மேகமூட்டத்துடன் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மற்ற மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு இல்லை என்றும், அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.