மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து; ஒருவர் காயம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்தானதில் ஒருவர் காயமடைந்தார்.

News image
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :12 மார்ச் 2025, 10:07 am

DIN

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்தானதில் ஒருவர் காயமடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், திருப்பாச்சூரில் மத்திய அரசைக் கண்டித்து, கண்டனப் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு பிரம்மாண்ட ஏற்பாடுகளை திமுகவினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துகொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக 25 அடி உயர ராட்சத கட்-அவுட்களையும் திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலினின் கட்-அவுட் ஒன்று சரிந்து விழுந்து விபத்தானது.

இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சிக்கியதில், அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். இதனையடுத்து, அனுமதியின்றி கட்-அவுட், ஃபிளக்ஸ் வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் சென்னை பள்ளிக்கரணையில் அதிமுகவினர் ஏற்பாடு செய்திருந்த கட்-அவுட் விழுந்து, விபத்தானதில் இளம்பெண் ஒருவர் பலியானதையடுத்து, திமுக நிகழ்ச்சிகளில் ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது என திமுக தலைமையும் உத்தரவிட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.