தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி!

தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26 தொடர்பாக...

News image
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
Updated On :14 மார்ச் 2025, 5:19 am

DIN

பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றி வருகிறார்.

YouTube video thumbnail

புற்றுநோய் தடுப்பு தொடர்பான அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் சிகிச்சை மையத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்றப்படும். 700 படுக்கைகள் கொண்டு சிகிச்சை அதிநவீன மையமாக மாற்றுவதற்கு ரூ. 120 கோடி ஒதுக்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் பணிகள் நிறைவு செய்யப்படும்.

பரவிவரும் கருப்பைவாய் புற்றுநோயை தடுப்பதற்கான எச்பிவி தடுப்பூசி 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக செலுத்தப்படும். இதற்கான ரூ. 36 கோடி ஒதுக்கப்படுகிறது.

தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று புற்றுநோய் பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் இதற்காக ரூ. 40 கோடி ஒதுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.