
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம், மாணவர்களின் செலவுக்கு மாநில அரசு தரப்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்காததால், மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்காமல் இருக்கிறது.
இதன்காரணமாக தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பள நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் நிதியில் இருந்து சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சட்டப்பேரவை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:
”புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் மாநிலத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,152 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்காமல் ஏமாற்றியுள்ளது.
மத்திய அரசு தேவையான நிதியை வெளியிடவில்லை என்றாலும், அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காகவும், ஆசிரியர்களின் சம்பளத்திற்காகவும், பிற செலவுகளுக்காகவும் மாநில அரசு தனது சொந்த நிதியை ஒதுக்கிடு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.