ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

சத்துணவு ஊழியா்கள் நியமனம்: அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பு!

சத்துணவு ஊழியா்கள் நியமனம் தொடர்பாக...

News image

சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் (கோப்புப்படம்)

Updated On :24 மார்ச் 2025, 4:43 pm IST

சட்டப்பேரவையில் சத்துணவு ஊழியா்கள் நியமனம் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2025-26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மாா்ச் 14-இல் தாக்கல் செய்தார். மாா்ச் 15-இல் வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் செல்வம் தாக்கல் செய்தார்.

இரு நிதிநிலை அறிக்கைகள் மீதும் மாா்ச் 17 முதல் மாா்ச் 20 வரை விவாதம் நடைபெற்றது. திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் உறுப்பினா்கள் விவாதங்களில் பங்கேற்று கருத்துகளை முன் வைத்தனர். அதற்கு மாா்ச் 21-இல் அமைச்சா்கள் தங்கம் தென்னரசுவும், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வமும் பதில் அளித்து உரையாற்றினா். மாா்ச் 22, 23 ஆகிய நாள்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை என்பதால் பேரவை கூட்டம் நடைபெறவில்லை.

இந்த நிலையில், பேரவை இன்று (மாா்ச் 24) காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரத்தில் உறுப்பினா்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதன் பிறகு துறை ரீதியான மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.

இதனிடையே, சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே. மணி, "அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், புதிய நியமனம் எப்போது தொடங்கப்படும்? அதேபோல, சத்துணவு மையங்களிலும் பணியிடங்கள் காலியாக உள்ளது. அங்கேயும் பணிச்சுமை இருக்கிறது, இவையெல்லாம் நிறைவேற்றப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் கீதாஜீவன், ”அங்கன்வாடி மையத்தில் 7,900 பணியாளர்கள், 8,997 சத்துணவு சமையலர்களை நியமிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் நியமன நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.