புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பிஏபி வாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி!

கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் தொடர்பாக...

News image

கோப்புப்படம்

Updated On :25 மார்ச் 2025, 5:14 am

DIN

சூலூர்: சுல்தான்பேட்டை அருகே பிஏபி வாய்க்காலில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் சுல்தான்பேட்டை அருகே தாசன் நாயக்கன்பாளையம் வழியாக பிஏபி வாய்க்கால் செல்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பொள்ளாச்சி தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்கள் நண்பர்களுடன் பிஏபி வாய்க்காலில் குளிக்க இறங்கி உள்ளனர்.

நண்பர்கள் குளித்துக்கொண்டிருந்த போது  சேலம் சின்ன மேட்டூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் தரணிதரன் ( 19) நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இது பற்றி அவரது குடும்பத்தினர் கோமங்கலம் காவல் நிலையத்தில் தனது மகனை காணவில்லை என புகார் தெரிவித்தனர்.

இந்த விசாரணையின்போது திங்கள்கிழமை சுல்தான்பேட்டை போலீஸார் தாசன் நாயக்கன்பாளையம் அருகே பிஏபி வாய்க்கால் பகுதியில் தரணிதரன்  உடல் ஒதுங்கி இருந்ததைக் கண்டறிந்து, உடலை மீட்டு இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர்.

தொடர்ந்து, தரணிதரன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தரணிதரன் உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பிஏபி வாய்க்காலில் தண்ணீர் செல்லும்போது குளிப்பதற்காகவும் நீச்சல் பயிற்சி செய்வதற்கும் தண்ணீரில்  இறங்க வேண்டாம் என எச்சரிக்கை பலகை பல இடங்களில் வைத்திருந்தும் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இத்தகைய செயலில் ஈடுபடக் கூடாது என சுல்தான் பேட்டை போலீஸார் கேட்டுக்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.