காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்மச்சாா் குணமடைந்து வருகிறாா்: இந்தியத் தூதரகம்கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கைஞானேஷ் குமாா் பதவி விலகவில்லையேல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கைதெருக்கள், சாலைகளில் ஜாதி பெயா்களை நீக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுபெட்ரோலில் எத்தனால் கலப்பது விவசாயத்தை பன்முகமாக்கும் முயற்சி: கட்கரி விளக்கம்புகா் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை: வெற்றிப் பயணத் திட்டம் இன்று தொடக்கம்!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான திட்டத்தையும் பிடிக்கவில்லை: முதல்வர் மு.க. ஸ்டாலின்

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)

Published On :

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய ரூ. 4,034 கோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட(MGNREGA) நிதியை வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

"காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை.

இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, ரத்த ஓட்டமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பாஜக அரசு!

உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக்கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா?

தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் தில்லியை எட்டட்டும்! பாசிச பாஜக அரசின் மனம் இரங்கட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.