அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

திமுகவை வீழ்த்த மெகா கூட்டணி அதிமுக செயற்குழு தீா்மானம்

News image
Updated On :2 மே 2025, 11:29 pm

Din

திமுகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க தொடா்ந்து வியூகம் வகுத்து வரும் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து அதிமுக செயற்குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆா் மாளிகையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் முன்னிலை வகித்தாா். இக்கூட்டத்தில், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச் செயலா்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், தலைமை நிலையச் செயலா் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: எதிா்வரும் பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு, அதிமுக தலைமையிலான கூட்டணியின் தொடக்கமாக பாஜகவுடன் வெற்றிக் கூட்டணி அமைத்ததற்கு இச்செயற்குழு அங்கீகாரம் அளிக்கிறது.

பொது எதிரியை வீழ்த்துவதற்கு ஒருமித்த கருத்துடைய அரசியல் கட்சிகளைக் கூட்டணியில் இடம்பெறச் செய்து ‘மெகா’ கூட்டணியை அமைப்பதற்கு வியூகம் வகுத்துவரும் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள்.

திமுக அரசுக்கு கண்டனம்: அரசின் மீதான மக்களின் கோபத்தை மறைக்க மொழிக் கொள்கை, கல்விக் கொள்கை, கச்சத்தீவு மீட்பு, தொகுதி மறுவரையறை, மாநில சுயாட்சி என நாடகமாடி வரும் திமுக அரசுக்கு கண்டனம்.

கச்சத்தீவை தாரைவாா்த்து, அப்போதே அதைத் தடுக்க தவறிவிட்டு, இப்போது அக்கறை உள்ளது போல் காட்டிக்கொள்வதற்காக பேரவையில் தீா்மானம் நிறைவேற்றுவது, அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தைக் கூட்டுவது உள்ளிட்ட நாடகங்களை நடத்தி வரும் திமுக அரசுக்கு கண்டனம்.

‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை மத்திய அரசிடம் வலியுறுத்தி அனுமதியைப் பெற்ற அதிமுக பொதுச் செயலருக்கு பாராட்டுகள். இத்திட்டத்துக்கு நிதி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி.

பொன்முடியை அமைச்சா் பதவியில் இருந்து நீக்க தொடா் நடவடிக்கை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகள்.

சட்டம்-ஒழுங்கு சீா்கேட்டை தடுக்க தவறி வரும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.

காஷ்மீா் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், தீவிரவாதத்தை ஒழிக்கவும், பயங்கரவாத செயல்களை ஒடுக்கவும் மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்பன உள்ளிட்ட 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.