நாளை அக்னி நட்சத்திரம்: என்ன செய்யக் கூடாது? அரசு வழிகாட்டு நெறிமுறை

நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் அரசு வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
அனல் தகிக்கும் அக்னி நட்சத்திரம் 
அனல் தகிக்கும் அக்னி நட்சத்திரம் Center-Center-Tirunelveli
Published on
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் எனப்படும் உச்ச கோடை காலம், மே 4 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி மே 28 வரை நீடிக்கிறது. இந்த 25 நாள்கள் பொதுவாக கடுமையான வெப்ப நாள்களாகக் குறிக்கப்படுகின்றன,

இந்த ஆண்டு, மார்ச் மாதத்திலிருந்து கோடை வெப்பம் தீவிரமடைந்து வருகிறது, மாநிலத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை ஏற்கனவே 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி உயர்ந்துள்ளது. மே மாத தொடக்கத்திலேயே கடுமையான வெய்யில் பதிவாகியுள்ளது.

அக்னி நட்சத்திரம் நெருங்கிவிட்டதால், குறிப்பாக கடலோர மாவட்டங்களில், வெப்ப அலை நிலைமைகள் மோசமடையும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது, மேலும், பல்வேறு இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பநிலை அதிகருத்து வருவதைக் கருத்தில் கொண்டு, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ இயக்குநரகம் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு விரிவான வழிகாட்டு ஆலோசனையை வழங்கியிருக்கிறது.

அதன்படி,

மக்கள் நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்கவும், முடிந்தவரை நேரடியாக சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சூரியன் உச்சத்தில் இருக்கும் ​​மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும்.

அவசியம் வெளியில் செல்ல நேரிடும்போது, பாதுகாப்புக்காக குடை அல்லது தொப்பிகளைப் பயன்படுத்துவதையும், வெய்யில் உச்சமடையும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்.

வெய்யிலில் நிறுத்தப்பட்டுள்ள கார் போன்ற வாகனங்களுக்குள் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளை விட்டுச் செல்வது கூடாது, ஏனெனில் வெய்யிலில் நிறுத்தப்படும் வாகனத்தின் உள்புற வெப்பநிலை ஆபத்தான முறையில் உயரக்கூடும்.

உடலில் நீர்ச்சத்து குறைவதற்குக் காரணமாக காபி, டீ மற்றும் மதுபானங்களை உட்கொள்வதைக் குறைத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் இருந்தாலும் உடல் வெப்பம் அதிகரிப்பதைக் தடுக்க, மதிய நேரங்களில் சமைப்பதைத் தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சூடான தரையில் வெறுங்காலுடன் நடப்பதையும், அதிக புரதம் அல்லது காலாவதியான உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.

உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்க, வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களான எலுமிச்சை தண்ணீர், மோர், லஸ்ஸி மற்றும் பழச்சாறுகள் போன்றவற்றை ஒரு சிட்டிகை உப்புடன் சேர்த்து குடிக்கலாம்.

மேலும், நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com