
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய சிறைக் கைதிகளில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று காலை வெளியிட்டார்.
தேர்வு எழுதியவர்களில் 7,53,142 மாணவ, மாணவிகள் (95.03 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், தமிழக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் 140 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 92.86 ஆகும்.
அதேபோல், 8,019 மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதியதில் 7,466 பேரும், 16,904 தனித் தேர்வர்களில் 5,500 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.