கணினி அறிவியலில் 9,536 பேர் சதம்! பாடவாரியாக...

பிளஸ் 2 பொதுத் தேர்வில் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணினி அறிவியலில் அதிகபட்சமாக 9,536 மாணவர்கள் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.

இந்த நிலையில், சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் இன்று காலை முடிவுகளை வெளியிட்டார்.

தேர்வு எழுதியவர்களில் 7,53,142 மாணவ, மாணவிகள் (95.03 சதவிகிதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல், மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்வு எழுதியதில் 4,05,472 (96.70 சதவிகிதம்) மாணவிகளும், 3,47,670 (93.16 சதவிகிதம்) மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 26,877 பேர் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

கணினி அறிவியலில் அதிகபட்சமாக 9,536 மாணவர்கள் நூற்றுக்குநூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிற பாடங்களில்...

தமிழ் - 135

இயற்பியல் - 1,125

வேதியியல் - 3,181

உயிரியல் - 827

கணிதம் - 3,022

தாவரவியல் - 269

விலங்கியல் - 36

வணிகவியல் - 1,624

கணக்குப் பதிவியல் - 1,240

பொருளியல் - 556

கணினிப் பயன்பாடுகள் - 4,208

வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் - 273

ஏதேனும் ஒரு பாடத்தில் நூற்றுநூறு மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 2,853 ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com