சேலத்தில் முதிய தம்பதி கொலை- பிகாரைச் சேர்ந்தவர் கைது

சேலம் ஜாகிர்அம்மாபாளையம் பகுதியில் முதிய தம்பதி கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை நடந்த வீடு.
கொலை நடந்த வீடு.
Updated on
1 min read

சேலம் ஜாகிர்அம்மாபாளையம் பகுதியில் முதிய தம்பதி கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியில் குடியிருக்கும பிகாரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை சூரமங்கலம் போலீஸ் கைது செய்துள்ளது. தம்பதியை அடித்துக்கொலை செய்து 10 சவரன் நகைகள் திருடப்பட்டது தெரியவந்துள்ளது. சேலம் ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி ஞாயிற்றுக்கிழமை பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சேலம் ஜாகிா்அம்மாபாளையம் எட்டிகுட்டை தெருவில் வசிப்பவா் பாஸ்கரன் (70). இவரும், இவரது மனைவி வித்யாவும் (65) வீட்டின் முன்பகுதியில் மளிகைக் கடை நடத்தி வந்தனா். வீட்டின் மாடியில் மகன் வாசுதேவனும், பக்கத்து தெருவில் இன்னொரு மகன் ராமநாதனும் வசித்து வருகின்றனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிமை வழக்கம்போல கடையை திறந்து பாஸ்கரன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாா்.

தேசிய ஊக்கமருந்து சோதனை மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் வேலை

பிற்பகல் உணவுக்காக வீட்டினுள் சென்றாா். பின்னா் வெகு நேரமாகியும் அவா் கடைக்கு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது மகன் வாசுதேவன், வீட்டினுள் சென்று பாா்த்துள்ளாா். அப்போது, பாஸ்கரன், வித்யா ஆகியோா் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். இருவரையும் தனது அண்ணன் ராமநாதன் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல முயன்றாா்.

ஆனால் சம்பவ இடத்திலேயே வித்யா உயிரிழந்தாா். படுகாயமடைந்த பாஸ்கரன் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். தொடா்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றிய போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தற்போது இக்கொலைகள் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com