ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

10ஆம் வகுப்பில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டைச் சகோதரிகள்!

10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டைச் சகோதரிகள்!

News image

தாயுடன் இரட்டைச் சகோதரிகள்

Updated On :16 மே 2025, 4:29 pm IST

கோவை : கூலித் தொழிலாளியின் இரட்டை மகள்கள் ஒரே மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். அருமையான வெற்றி என கொண்டாடி மகிழ்கிறார்கள் பெற்றோரும் உறவினர்களும்.

கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்து வருபவரின் இரட்டை மகள்கள், கனிகா மற்றும் கவிதா. 2025 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதிய இரட்டைச் சகோதரிகளும் தலா 474 என ஒரே மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர்.

இந்த இரட்டையர்கள், ஒரே அளவிலான முயற்சி மற்றும் கல்வி உறுதிப்பாட்டின் மூலம் ஒரே மதிப்பெண்களை பெற்று உள்ளனர். தமிழில் 95 மற்றும் 96, ஆங்கிலத்தில் 97 மற்றும் 98, கணிதத்தில் இருவரும் 94, அறிவியலில் 89 மற்றும் 92, சமூக அறிவியலில் 95 மற்றும் 98 என சிறந்த மதிப்பெண்கள் பெற்று உள்ளார்கள்.

பின்னணியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும், பொருளாதார சவால்களை எதிர்கொண்டும், இருவரும் பெற்ற இந்த சாதனை, பல மாணவர்களுக்கு உற்சாகமும், உந்துதலையும் ஏற்படுத்தும் விதமாக முன்னுதாரணமாக அமைந்து உள்ளது.

பள்ளி ஆசிரியர்களும், கிராம மக்கள் அனைவரும் இச்சகோதரிகளின் வெற்றிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.