அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சென்னை புறநகரில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!

சென்னையில் பரவலாக மழை பெய்தது பற்றி..

News image
மழை
Updated On :17 மே 2025, 7:47 am

DIN

சென்னை புறநகர்ப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மே 4ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெய்யில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது. தொடர்ந்து மே 28 வரை அக்னி நட்சத்திரம் நீடிக்க உள்ளது. வேலூர் உள்ளிட்ட ஒருசில பகுதியில் வெய்யில் சதம் அடித்துள்ளது.

இருப்பினும், அதீத வெப்பத்தால் ஆங்காங்கே அவ்வப்போது இரவு நேரங்களில் மிதமான மழையும் பெய்து வருகின்றது. இந்த நிலையில், இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், பிற்பகல் 1 மணியளவில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளான பாடி, அண்ணாநகர், போரூர், வளசரவாக்கம், ராமாபுரம், கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட சுற்றுப் பகுதியில் மழை பெய்து மக்களின் மனதை குளிர்வித்துள்ளது.

அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்த வாரம் கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கஉள்ளது.

தமிழகத்தில் இந்த மாதத்தின் கடைசியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.