ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் ஓட்டிச்சென்ற காரின் டயர் வெடித்ததால் பரபரப்பு நிலவியது.
நெதர்லாந்தில் ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயம் மே 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் அஜித்குமார் போர்ஷியா அணி சார்பில் பங்கேற்றார்.
இந்தப் போட்டியின் இரண்டாவது சுற்று இன்று தொடங்கியது. இந்த நிலையில் அஜித்குமார் ஓட்டிச்சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் விபத்தில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விபத்தில் நடிகர் அஜித்குமாருக்கு எந்த பாதிப்பும் இல்லை என தகவல் தெரியவந்துள்ளது.
கார் ட்ராக் சர்க்யூட்டில் நின்ற பிறகு, டயர் மாற்றப்பட்டு மீண்டும் பந்தயத்தில் அஜித் பங்கேற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








