
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் மெல்ல நிரம்பி வருகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பாயும் தென்பண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கெலவரப்பள்ளி அணை, கிருஷ்ணகிரி அணை நிரம்பி வருகின்றன. அணைகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையாக அணைக்கு வரும் நீர் முழுவதும் திறந்து விடப்படுகின்றன.
அதன்படி, இன்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணையின் நீர் வரத்து 4,208 கன அடியாக இருந்தது. நீர்வரத்து முழுவதும், மதகுகள் வழியாக வெளியேற்றப்படுகின்றன.
இதனால், தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் எனவும் கிருஷ்ணகிரி அணையிலிருந்து சாத்தனூர் அணை வரையில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரத்தில் தாழ்வான பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.
தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு(மி.மீ): ஓசூர் - 72.4, தேன்கனிக்கோட்டை - 57, நெடுங்கல் - 49, சின்னாறுஅணை -45, சூளகிரி - 40, கெலவரப்பள்ளி அணை - 30, தளி - 30, பாரூர் - 28, அஞ்செட்டி - 15.1, கிருஷ்ணகிரி -10.6, ராயக்கோட்டை -7, கிருஷ்ணகிரி அணை - 2.8, போச்சம்பள்ளி - 2.
இதையும் படிக்க | பல்லடம்: விஷவாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.