
சென்னை: பாமகவில், ஏற்கனவே ராமதாஸ் - அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், பாமக பொறுப்பிலிருந்து விலகுவதாக முகுந்தன் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார். மேலும், பாமக பொறுப்பில் இருந்து விலகும் கடிதத்தை அன்புமணிக்கு அனுப்பியுள்ளார் முகுந்தன் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொந்தக் காரணங்களுக்காக பாமக பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்று முகுந்தன் பரசுராமன் தனது பதவி விலகல் கடிதத்தில் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
அன்மபுமணிதான் எங்களின் எதிர்காலம் என்று நினைத்துத் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்றும் முகுந்தன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் பாமக சிறப்புப் பொதுக்குழுவில், ராமதாஸ் மகள் வழிப் பேரன் முகுந்தனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், கட்சியின் தலைவர் அன்புமணிக்கு இதில் அதிருப்தி ஏற்பட்டது. அந்த மேடையிலேயே, பகிரங்கமாக, தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் அன்புமணி. இதன் தொடர்ச்சியாக, ராமதாஸ் - அன்புமணி இடையே மனக்கசப்பு அதிகரித்திருக்கும் நிலையில், கட்சிப் பதவியிலிருந்து விலகுவதாக முகுந்தன் அறிவித்துள்ளார்.
பதவி விலகல் கடிதம்..
கட்சிப் பதவியிலிருந்து விலகுவதாக கடிதம் அனுப்பியிருக்கும் முகுந்தன், பாமக இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 2024ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன்.
மருத்துவர் ராமதாஸ் அவர்கள்தான் என்றென்றும் எனது குலதெய்வம், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அன்மபுமணிதான் எங்களின் எதிர்காலம் என்று நினைத்துத் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்றும் முகுந்தன் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.