கமல்ஹாசன் விஸ்வரூபம்! தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு!

கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு
நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்X | Kamal Haasan
Published on
Updated on
1 min read

கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜார்ஜ் ஜோஜு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படம், ஜூன் 5 ஆம் தேதியில் வெளியிடப்படவுள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், தமிழ்மொழியில் இருந்துதான் கன்னடம் உருவானது என்று கூறினார்.

அவரின் கருத்துக்கு கர்நாடக அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், கன்னட அமைப்பினரும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.

மேலும். அவரின் கருத்துக்காக மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர். இல்லையெனில், கர்நாடகத்தில் தக் லைஃப் திரையிடப்பட மாட்டாது என்றும் கூறினர்.

இருப்பினும், தனது கருத்துக்காக ஒருபோதும் மன்னிப்பு கோர மாட்டேன் என்று கமல்ஹாசன் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில், கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தென்னிந்திய நடிகர் சங்கம் கூறும்போது, நடிகர் கமல்ஹாசனை கன்னட மொழிக்கு எதிரானவர் போன்று மாயத் தோற்றத்தை சித்திரித்து, அவதூறு பரப்புவது முற்றிலும் தவறானது. அவரின் கருத்தைத் தவறான அர்த்தத்தில் பரப்புரை செய்கின்றனர்.

இந்திய மொழிகள் அனைத்துக்கும் முறையான உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துபவர் அவர் என்று தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com