

எஸ்.ஐ.ஆர். பணிக்கு ஒரு மாதம் போதுமானது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியில், எஸ்.ஐ.ஆர். எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதற்காக திமுக பல்வேறு காரணங்களை கூறி வருகிறது. எஸ்.ஐ.ஆர். பணிக்கு ஒரு மாதகாலம் போதுமானது. முறைகேடாக வாக்காளர்களை சேர்ப்பது திமுகவுக்கு கைவந்த கலை. எஸ்.ஐ.ஆர் மூலம் சதி செய்து பிகாரில் ஜெயித்தார்கள் என்பது சரியல்ல.
வாக்காளர்களை சேர்க்கலாம். ஆனால் அவர்களை வாக்களிக்க வைக்க முடியாது. ஆர்கேநகர் தொகுதியில் மட்டும் 31 ஆயிரம் வாக்குகள் நாங்கள் நீதிமன்றம் சென்றதால் நீக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதியில் இவ்வளவு என்றால் அனைத்து தொகுதிகளுக்கும் சேர்த்து 60 லட்சம் வாக்குகள் கூட வரலாம். இதில் எந்த தவறும் கிடையாது.
இந்த கட்சி அந்தக் கட்சி என பார்க்காமல், நேர்மையான முறையில் வாக்காளர்கள் இடம் பெற வேண்டும். திமுக எதிர்ப்பு தெரிவித்து விட்டு, பிஎல்ஓ உடன் திமுகவினர் சென்று வருகின்றனர். மற்ற கட்சியினரை விட திமுகவினர்தான் அதிகம் சென்று வருகின்றனர். இதை நாங்கள் கவனித்து கொண்டுதான் உள்ளோம் என்றார்.
அண்ணாமலை சொத்துக்குவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என பதிலளித்தார். 30 ஆயிரம் கோடிக்கு ஸ்மார்ட் மீட்டர் வைப்பதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற இருக்கிறது. முழுமையான டெண்டர் விவரங்கள் வெளியான பிறகு இதைத் தடுக்க அதிமுக சார்பில் பொதுநல வழக்கு போடப்படும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.