

கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக ஆவணங்கள் ஒப்படைப்பு வழக்கானது கரூர் நீதிமன்றத்தில் இருந்து திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
கரூரில் செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் 49 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வந்த நிலையில். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தற்போது ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோக்கி மேற்பார்வையில் சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் வழக்கை விசாரித்து வந்த எஸ்ஐடி தரப்பு சார்பில் கரூர் ஜூடீசியல் மாஜேஸ்திரேட் நீதிமன்றம் 1-ல் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தும் திருச்சி நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் ஆவணங்களை திருச்சி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இனி இந்த வழக்கில் ஆவணங்கள் தொடர்பான வழக்கு திருச்சி நீதிமன்றம் மூலமாகவே நடைபெறும் என சிபிஐ அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிக்க: பிகார் தேர்தல்: ஜன் சுராஜ் 5 இடங்களில் முன்னிலை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.