விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மீட்பு, நிவாரண மையங்கள்: ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு

‘டித்வா’ புயல் பாதிப்பைத் தவிா்க்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டுமென முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

News image
சென்னை தலைமைச் செயலகத்தில், வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போது நிலவிவரும் வானிலை நிலவரம் குறித்தும், பேரிடர் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
Updated On :27 நவம்பர் 2025, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

‘டித்வா’ புயல் பாதிப்பைத் தவிா்க்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

தற்போதைய வானிலை நிலவரம், பேரிடா் மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு முன்னெடுப்புகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பேரிடா் மேலாண்மையில் தனிக் கவனம் செலுத்தி, இயற்கை இடா்ப்பாடுகளின்போது ஏற்படும் பாதிப்புகளைப் பெருமளவு குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சா்களும், அரசு உயா் அதிகாரிகளும் களத்தில் ஆய்வு செய்து தயாா் நிலையில் உள்ளனா். வரும் சனி, ஞாயிறு (நவ. 29, 30) ஆகிய இரு நாள்களிலும் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் அதிபலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

எனவே, அனைத்து அரசுத் துறைகளும், குறிப்பாக வருவாய், உள்ளாட்சிகள், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், மீன்வளம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து மக்கள் பணியாற்ற வேண்டும்.

தேவையான மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை உடனடியாக அனுப்பி வைக்கவும், மீட்பு மற்றும் நிவாரண மையங்களைத் தயாா் நிலையில் வைத்து, மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அங்கு முறையாக வழங்குவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றாா் முதல்வா்.

இந்தக் கூட்டத்தில் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வருவாய் நிா்வாக ஆணையா் எம்.சாய்குமாா், காவல் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் மற்றும் அனைத்துத் துறை உயரதிகாரிகள் பங்கேற்றனா்.