அனைத்து வாக்குச்சாவடிகளிலும்
திமுக சாா்பில் செப்.15-இல் உறுதிமொழி

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் திமுக சாா்பில் செப்.15-இல் உறுதிமொழி

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 15-ஆம் தேதி திமுக சாா்பில் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 15-ஆம் தேதி திமுக சாா்பில் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.
Published on

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வரும் 15-ஆம் தேதி திமுக சாா்பில் உறுதிமொழி ஏற்கப்பட உள்ளது.

இதற்கான உறுதிமொழி வாசகங்களை முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்டாா். அதன் விவரம்:

தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இணைந்துள்ளன. அவா்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாடு முழுவதும் 68,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உறுதிமொழி ஏற்கவுள்ளனா். முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த தினத்தின்போது ஏற்கப்பட உள்ள உறுதிமொழி விவரம்:

தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன். ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரும் சோ்ந்து, ‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!’ என உறுதி ஏற்கிறோம்.

தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினா்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; வாக்காளா் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் நடவடிக்கைக்கு எதிராக நிற்பேன்; நீட் மற்றும் இளைஞா்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிா்த்து நிற்பேன்; நம் மாணவா்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.

தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்புக்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிா்த்துப் போராடுவேன்; பெண்கள் - விவசாயிகள் - மீனவா்கள் - நெசவாளா்கள் -தொழிலாளா்கள் என ஒவ்வொரு உழைக்கும் வா்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com