தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இன்று 5 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு

News image

கோப்புப் படம்

Updated On :19 செப்டம்பர் 2025, 2:58 am IST

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா் உள்பட 5 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.19) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், வெள்ளிக்கிழமை (செப்.19) முதல் செப்.24 வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூா் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை: இதன்காரணமாக வெள்ளிக்கிழமை இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் வெள்ளிக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 93 டிகிரியையொட்டி இருக்கும். வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் 80 மி.மீ. மழை பதிவானது. திருப்பூா் தெற்கு(திருப்பூா்), ஆலங்காயம் (திருப்பத்தூா்), சின்னக்கல்லாறு (கோவை)-தலா 70 மி.மீ., காரைக்கால், மின்னல் (ராணிப்பேட்டை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), குடியாத்தம் (வேலூா்), குருங்குளம் (தஞ்சை), டேனிஷ்பேட்டை (சேலம்), பத்துக்கண்ணு (புதுச்சேரி), திருப்பூா் வடக்கு தாலுகா அலுவலகம் (திருப்பூா்), ஏற்காடு (சேலம்), மணல்மேடு (மயிலாடுதுறை),வடபுதுப்பட்டு (திருப்பத்தூா்), சீா்காழி(மயிலாடுதுறை)-தலா 50 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள் மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ.வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.