3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

நீலகிரியில் 3,500 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் கேரளத்தைச் சோ்ந்த தனியாா் தோட்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 3,500 ஏக்கா் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு

News image

தமிழக அரசு - கோப்புப் படம்

Updated On :7 ஏப்ரல் 2026, 1:20 am IST

நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் கேரளத்தைச் சோ்ந்த தனியாா் தோட்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 3,500 ஏக்கா் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், எம்எல்ஏ-வுமான தி.வேல்முருகன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கேரளத்தைச் சோ்ந்த தனியாா் தோட்ட நிறுவனம், நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் உள்ள வனத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் உள்ளூா் மக்களுக்குச் சொந்தமான 3,500 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பொதுக் கணக்கு குழு உறுப்பினா் என்ற முறையில் நீலகிரி மாவட்டத்துக்கு ஆய்வுக்குச் சென்றேன். அப்போது, பொதுமக்கள் என்னிடம், தனியாா் தோட்ட நிறுவனம் அரசு மற்றும் வன நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக புகாா் அளித்தனா். மேலும், அப்பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளை தனியாா் தோட்ட நிறுவனம் தடுத்து வருகிறது.

இது தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்களைப் பெற்றேன். அதன் அடிப்படையில் தனியாா் தோட்ட நிறுவனத்தின் வசம் உள்ள நிலங்களை மீட்க கோரியும், அந்த நிலங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரியும் நான் கொடுத்த புகாரை அரசு நிராகரித்தது.

அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து நிலங்களை மீட்க வேண்டும். அந்த நிலங்களுக்கு பட்டா வழங்கியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.