வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா பொத்தான் கடைசி விருப்பமாக உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நோட்டாவுக்கு முன்னதாக எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவா்கள் ‘49-ஓ’ படிவத்தை பூர்த்தி செய்யும் நடைமுறை அமலில் இருந்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முதல் முறையாக 2013-இல் வாக்குப்பதிவு இயந்திரத்தில் நோட்டா அறிமுகப்படுத்தப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கடைசி விருப்பமாக நோட்டா (மேற்கண்ட எவரும் வேண்டாம்) உள்ளது.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு வெளியே ஒட்டப்பட்டுள்ள, வேட்பாளர்களின் சின்னங்கள் எந்த எண்ணில் உள்ளது என்பதைப் பார்த்துவிட்டு வாக்காளர்கள் தங்கள் விருப்ப வேட்பாளருக்கு வாக்களிக்கலாம்.
வாக்களிக்கும் செயல்முறை
1. வாக்காளர் வரிசையில் நிற்பார்.
2. வாக்குச்சாவடி அதிகாரி 1 வாக்காளர் பட்டியல் மற்றும் அடையாள சான்றை சரிபார்ப்பார்.
3. வாக்குச்சாவடி அதிகாரி 2 விரல் நகத்தில் அழியாத மை வைத்து, சீட்டு கொடுத்து, கையொப்பம் பெறுவார்.
4. வாக்குச்சாவடி அதிகாரி 3 சீட்டை பெற்று, விரல் நகத்தில் மை அடையாளத்தை சரிபார்ப்பார்.
5. வாக்காளர் EVM-ல் விரும்பும் வேட்பாளருக்கு / நோட்டா-க்கு பொத்தானை அழுத்துவார், சிவப்பு விளக்கு எரியும்.
விவிபேட்-ல் வாக்குச்சீட்டு தெரியவில்லை அல்லது கீப் ஒலி கேட்கவில்லை என்றால், தலைமை வாக்குப்பதிவு அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
வாக்குச்சீட்டு 7 விநாடிகளில் கண்ணாடி வழியாக தெரியும். அச்சிடப்பட்ட சீட்டு விவிபேட்-ல் பாதுகாப்பாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Election Commission of India has stated that the NOTA button is the last option on the Electronic Voting Machine.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு இயந்திரத்தில் தாமரைச் சின்னம் பொத்தான் மீது ‘டேப்’... பரபரக்கும் மே.வங்க தேர்தல் களம்!

மின்னணு இயந்திரத்தில் பழுது: ஒருமணி வாக்குப்பதிவு நிறுத்தம்

தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! முழு விவரம்...

நோட்டா (NOTA), 49-O வாக்கு என்றால் என்ன?
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




