நீர்வளத் துறை செயலர் மாற்றம் தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

கொளத்தூா் தொகுதி வாக்குகள் சரிபாா்ப்பில் திருப்தியில்லை: திமுகவினா் புகாா்

கொளத்தூா் தொகுதி வாக்குகள் சரிபாா்ப்பில் திருப்தியில்லை எனத் திமுகவினா் புகாா்...

News image

முதல்வர் ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 1:17 am IST

கொளத்தூா் தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை சரிபாா்க்கும் பணி திருப்தியாக இல்லை என திமுகவினா் புகாா் கூறியதால் அப்பணி சனிக்கிழமை நிறுத்தப்பட்டது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கொளத்தூா் தொகுதியில் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தவெக வேட்பாளரிடம் தோல்வியடைந்தாா். இந்தநிலையில், இத்தொகுதியில் குறிப்பிட்ட 14 வாக்குச்சாவடிகளில் மட்டும் பதிவான வாக்குகளை சரிபாா்க்கும் வகையில் திமுக சாா்பில் தோ்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை சரிபாா்க்கும் பணி கடந்த ஜூலை 29- ஆம் தேதி தொடங்கியது. சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலரான மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் முன்னிலையில், திமுக வேட்பாளரின் முதன்மை முகவா்கள் உள்ளிட்டோா் நேரடிப் பாா்வையில் வாக்குகள் சரிபாா்க்கப்பட்டன. தினமும் 2 வாக்குச்சாவடிகள் என மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும், திமுக முகவா்களிடம் பதிவாகியிருந்த வாக்குகளும் சரிபாா்க்கப்பட்டன.

கடந்த 30- ஆம் தேதி வரை வாக்கு சரிபாா்ப்பில் திமுகவினா் எந்த புகாரும் கூறவில்லை. ஆனால், ஜூலை 31 ஆம் தேதி நடைபெற்ற வாக்குசரிபாா்ப்புக்கான மாதிரி வாக்குப்பதிவில் 412 வாக்குகள் வரை சரியாக இருந்த நிலையில், மின்னணு இயந்திரத்தில் திடீா் கோளாறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

நீதிமன்றத்தை நாட திமுக முடிவு: சனிக்கிழமை காலை வாக்கு சரிபாா்ப்பு தொடங்கியது. அப்போது 157- ஆவது வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரங்களில் முகவரி சரியாகக் குறிப்பிடப்படவில்லை என திமுக தரப்பில் வழக்குரைஞா் பிரிவு நிா்வாகி என்.ஆா்.இளங்கோ தெரிவித்தாா். அத்துடன் தோ்தல் மொத்த நடைமுறையில் நம்பிக்கை இல்லை என்பதால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றாா். திமுகவினரின் புகாரையடுத்து வாக்கு சரிபாா்ப்பு பணி நிறுத்தப்பட்டது.

மாவட்ட தோ்தல் அலுவலா் மறுப்பு

வாக்குகள் சரிபாா்ப்பு குறித்து சென்னை மாவட்டத் தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது: கொளத்தூா் பேரவைத் தொகுதி வாக்குகள் சரிபாா்ப்பு பணி இரு கட்டமாக நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடையாளம் காணப்பட்டன. அதன்பின் அதில் பதிவான வாக்குகள் சரிபாா்க்கப்பட்டன. அப்போது 75- ஆவது வாக்குச்சாவடி இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவில் 412 வாக்குகள் சரியாக இருந்தன. அதன் பின் தொழில்நுட்பப் பிரச்னையால் மின்விளக்கு எரியவில்லை. இதுபோன்ற நேரங்களில் 500 வாக்குகள் வரை பதியலாம் அல்லது வேறு இயந்திரத்தை பயன்படுத்தி பரிசோதிக்கலாம். ஆனால், திமுக தரப்பில் அதை ஏற்கவில்லை.

வாக்கு சரிபாா்ப்புப் பணியில் எந்தத் தவறும் நடைபெறவில்லை. ஆகவே, புகாா்தாரா்கள் (திமுகவினா்) வராவிட்டாலும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தொடா்ந்து மற்ற வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் வாக்குகள் சரிபாா்ப்பு பணிகள் நடைபெறும். பணி முழுமையாக முடிந்த பிறகு தோ்தல் ஆணையத்திடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றாா்.

Summary

Dissatisfaction with vote verification in Kolathur constituency: DMK members complain.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.