இன்று ஆடிப் பெருக்கு: ஆறுகள் வறண்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம்இடைத்தோ்தலுக்காகக் காத்திருக்கிறேன்: சீமான்ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்கள் விரைவில் நிறுத்தம்: டிரம்ப்6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
/

நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா!

தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டதால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது குறித்து...

News image

காவேரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழாவை ஆற்று மணல் பரப்பில் உட்கார்ந்து கொண்டாடி வரும் புதுமண தம்பதிகள் - டிஎன்எஸ்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 9:34 am IST

தஞ்சை மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டதால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது.

காவேரி தாய்க்கு நன்றி செலுத்தும் விதமாக ஆடி பதினெட்டாம் நாள் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் காவிரியில் உரிய தண்ணீர் வந்ததால் படித்துறைகளில் மக்கள் பச்சரிசி காதோலை - கருகமணி, பழங்கள் வைத்து காவிரி தாயிக்கு நன்றி தெரிவித்து வழிபட்டனர். மேலும் புதுமண தம்பதிகள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு தாலி மாற்றிக் கொண்டனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு மேட்டூரில் போதிய தண்ணீர் இல்லாததால் காவேரி உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகிறது.

காவேரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்து காணப்படுகிறது. ஆற்றில் நீர்வரத்து அறவே இல்லாததால் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட வந்த பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.

மேலும், ஆற்றின் படித்துறைகளில் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டு பக்தர்களின் வசதிக்காக தண்ணீர் விடப்பட்டுள்ளது. இதில் பக்தர்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர்.

ஆடிப்பெருக்கு விழாவை தண்ணீரில் கொண்டாடிய பக்தர்கள் இன்று ஆற்று மணல் பரப்பில் உட்கார்ந்து கொண்டாடி வருகின்றனர்.

ஆடிப்பெருக்கு விழாவுக்கு காவிரியில் நீர் வரும் என எதிர்பார்த்து வந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் இந்த ஆண்டு பக்தர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

Summary

Aadi Perukku festival loses its charm due to lack of water inflow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.