திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

ஆடிப்பெருக்கு: கொள்ளிடம் ஆற்றில் திரண்ட மக்கள்!

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி அன்னையை வழிபடும் வகையில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் மக்கள் வழிபட்டது பற்றி...

News image

கொள்ளிடக்கரையில் திரண்ட மக்கள் - DIN

Updated On :3 ஆகஸ்ட் 2026, 11:48 am IST

சிதம்பரம்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு காவிரி அன்னையை வழிபடும் வகையில் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த திரளான மக்கள் வல்லம்படுகை அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் திங்கள்கிழமை குவிந்தனர்.

காவிரி டெல்டா கடைமடை பகுதியான சிதம்பரத்தை அடுத்த கொள்ளிடக்கரையில், சுற்றுப்பகுதியில் உள்ள மக்கள் குடும்பத்துடன் வந்து காவிரி அன்னையை வழிபட்டு ஆடிப்பெருக்கைக் கொண்டாடினர்.

தாலி பிரித்து கோத்து காவிரி அன்னைக்கு படைத்த பெண்கள்

தாலி பிரித்து கோத்து காவிரி அன்னைக்கு படைத்த பெண்கள்

ஓடும் நீரில் புதுமணத் தம்பதியினர் தங்களது திருமண மாலையை விட்டால் தங்கள் குடும்பம் செல்வச் செழிப்போடு வளரும் என்பது ஐதீகம். இதனால் புதுமணத் தம்பதிகள் தங்களது திருமண மாலையை ஆற்றில் விட்டு தாலியைப் பிரித்து கோத்து காவிரி அன்னைக்கு படைத்து அணிந்து கொண்டனர். திரளான மக்கள் குடும்பத்தினருடன் வந்து மாவிளக்கு போட்டு, மஞ்சள் கயிறு, கருகமணி, வெற்றிலை, பாக்கு, அவல், பொறி, பழங்கள் வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

சிதம்பரம் நடராஜருக்கு தீர்த்தவாரி

ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் இருந்து உற்சவமூர்த்தியான சிவகாமசுந்தரி சமேத சந்திரசேகரர் புறப்பட்டு சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் உள்ள கொள்ளிடக்கரையில் வந்து தீர்த்தவாரி காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். வல்லம்படுகை பரதேசியப்பன் கோயில் நுழைவாயில் அருகே உள்ள நீராழி மண்டபத்தில் தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஸ்ரீசந்திர சேகர பெருமான் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது.

Summary

AadiPerukku: People gather at the Kollidam River near chidambaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.