திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

சுருளி அருவியில் நீர் வரத்து சீரானது: சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி

சுருளி அருவியில் நீர் வரத்து சீரானது தொடர்பாக...

News image

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீர் வரத்து சீரானதைத் தொடர்ந்து திங்கள்கிழமை குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள். - டிஎன்எஸ்

Updated On :3 ஆகஸ்ட் 2026, 10:04 am IST

உத்தமபாளையம் : தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் 2 நாள்களுக்குப் பின் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்தனர். மேகமலையில் மழை பெய்து வருகிறது.

கம்பம் அருகேயுள்ள மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவிக்கு மேகமலை வனப் பகுதியில் பெய்யும் மழை நீரே முக்கிய நீராதாரம். ஆனால், கடந்த சில மாதங்களாக மழைப்பொழிவின்றி இந்த அருவி வடது.

இதற்கிடையே, சனிக்கிழமை மேகமலை, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு, தூவானம், அரிசிப்பாறை போன்ற அடா்ந்த வனப் பகுதியில் பலத்த மழை பெய்தது.

இதையடுத்து, சுருளி அருவிக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், பாதுகாப்புக் கருதி அருவிக்குச் செல்லவும், பாா்வையிடவும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.

தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால், சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் தடை விதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திருப்பிச் சென்றனா். மேலும், சிறிய கற்கள், கட்டைகள் வந்ததாதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை 8 மணிக்கு மேல் நீா்வரத்து சீராக இருந்தால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், 3 ஆவது நாளில் சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதை அடுத்து சுற்றுலாப் பயணிகளை குளிக்க வனத்துறை அனுமதி அளித்தனர்.

ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுருளி அருவி நீராடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Summary

Water flow at Suruli Falls stabilizes; tourists permitted to bathe

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.